பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變165


சொல்லிக் கொள்ள முடியாதது நாம்தான் நகர்த்துகிறோம் என்றெண்ணாமல் நாம் நடத்தப்படுகிறோம் என்கிற உணர்வோடு உலகில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அது நமக்குக் கற்பிக்கிறது

202 தொலைவில் தெம்புடன் கண்கள்

நகர்ந்து சென்று கொண்டிருத்தல் என்கிற நிலைக்கு அப்பால் இணைதல் என்பது ஒரு இருத்தல்தான். இந்த நிலை ஆணையுடப் பிறந்ததுவே தவிர ஆணைக்கு கட்டுப்பட்டு வருவதில்லை ஆணும் பெண்ணும் அந்த அசைவற்ற இடத்தை நோக்கிச் செல்கின்றனர், அவ்வாறு செல்கையில் அவர்கள் உலகத்தை நிலைநிறுத்தச் செய்து பின்னர் அதையும் உடைத்து நகரச் செய்கின்றனர்

இத்தகைய போராட்டம் உலகத்தை நடுங்க வைத்துப் பின்னர் புதியதோர் உலகம் செய்து, பழைய உலகை முடிவுக்குக் கொண்டு வருகிறது தொலைவிலுள்ள ஆனால் தெம்புடன் இருக்கிற கண்கள் படைத்த காதலர்கள் புதியதோர் தொடக்க நிலைக்குத் திரும்புகின்றனர் மீண்டும் மீண்டும் இந்த நிலை தொடர்கின்றது

203. தன்னுள் மாறும் காலச்சுழற்சி

பருவ காலங்களைப் போலவே, ஆர்வம்