பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



164 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


கொண்டிருக்கும் உடலின் சிந்தனையை மனம் பின் தொடர்கிறது.

பின்னர், வியப்பில் ஆழ்ந்திருக்கும் மனம் ஆசை எழுவதைக் கவனிக்கிறது. செல்லுதல், எழுதல் இவை முடிவுற்று மனத்திற்கு ஆழ்ந்த அறிதல் எட்டும் வரை உடல் எண்ணுவதால் விளையும் மயக்க நிலையில் மனம் யாவற்றையும் மறந்து விடுகிறது.

201. உடல் தீர்மானிக்கட்டும்

விடிவிக்க வேண்டியதை நகர்த்துதல் என்கிற நிலை விடுவித்து விடுகிறது. உறுதியாகப் பற்றி கொள், அது நகர முடியாது. அதுகட்டுப்பாட்டுக்குள் அதே சமயம் எட்டும் தொலைவிலேயே இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்து விடவும் முடியாது. உடலே முடிவு காணட்டும்.

நாளும் பொழுதும் உலகம் நம்மைத் தன் மாயவலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறது. காத்திருந்த பின்னரே விடுதலை செய்வது என்ற எண்ணத்தை நகர்த்துதல் என்கிற செயல் நடைபெறுகிறது. நமக்குள்ளிலிருந்தே, ஏதோ ஒன்றிலிருப்பது ஆனால் எதையும் செய்யாத நிலையிலிருந்தே நகர்த்துதல் என்கிற நிலை ஏற்படுகிறது. நம்மிடம் உள்ளது தான் என்றாலும் கூட நமது என்று