பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變169


படுகின்றன. மனம் இருக்கிற காரணத்தினால் எண்ணங்கள் அந்த நிலையைக் காண முடிவதில்லை உடல் இருப்பது காரணமாகப் புலன்கள் அதை உணர முடிவதில்லை.

உடலோடு உடல் இணைந்து ஒன்றுபடும்போது, இடையிலிருக்கும் நிலையைப் பற்றிக் கொள். எண்ணங்களிடையே மனம் சிந்திக்கும் போது, புரிந்து கொள்ளுதல் தெளிவாகிறது, எளிதாகிறது

ஒன்றுக்கிடையே மற்றொன்று என்கிற உண்மையை ஆண் பெண் இணைதல் என்கிற நிலை புரிய வைக்கிறது.

206. ஈரடிகளும் கூத்திட வேண்டும்

எப்பொழுது பெண்ணின் வெறுமை நிரப்பப்பட்டு, ஆணின் முழுமை வெறுமையாக்கப் படுகிறதோ, ஒருவர் மற்றவரை செயலிழக்கச் செய்கிறார் என்றாகிறது

ஆண் வீழ்ச்சியுறுகிறான், தன்னைச் செயலிழக்கச் செய்து அவள் முழுமை பெற்று விடுகிறாள் என்கிற காரணத்தினால் அவன் அவளைக் குறை கூறுகிறான். அதே சமயம் அவனுக்கு அவள் துணை தேவைப்படுகிறது. பெண்ணினால் தன் ஆற்றலை இழப்பது அவனுக்குப் புதிது.