பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 173


ஒன்றுவதும், முடிவு பெறாததை முடிப்பதுமான நிலையே ஆணும் பெண்ணும் இணைவது.

உடல் அசைவு கொடுப்பது, மனம் மனமாகவும், உடல் உடலாகவும் செயல்படும் போதும் ஏற்படும் அசையா நிலையாகும்

இணைதல் என்பது ஆணும் பெண்ணும் கூடும் முயற்சி எடுக்கா முயற்சியும், நிலைத்து நிற்கும் அமைதியான பேசாமையுமாகும்.

209. ஆணும் பெண்ணும் இல்லாவிடில்?

கலவியின் அந்த அமைதியான நேரத்தில் ஆணின் முழுமையையும் எடுத்துக் கொண்டபின் தன்னுடைய வெறுமையை முழுவதுமாக நிரப்பப்பட்ட நிலையில் வேறு என்ன தேவையிருக்கிறது பெண்ணுக்கு? அதேபோல், தன்னுடைய ஆற்றலை யெல்லாம் பெண்ணுடைய வெறுைைய இட்டு நிரப்பிய பின், கொடுப்பது வேறு என்ன இருக்கிறது ஆணுக்கு? ஆண் பெண்ணை அழித்து விடுகிறான், பெண் ஆணை அழித்து விடுகிறாள்

ஆண் தன்னுடைய ஆற்றலை எல்லாம் பெண்ணுக்குக் கொடுத்து விடுவதாலும், பெண் ஆணுடைய ஆற்றலை எல்லாம் எடுத்துக் கொள்