பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 37


ஆணும், உலகில் சமநிலை கொள்ள பெண்ணும் ஒருவர் மற்றவரின் மறைவான மையத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

44. உள்ளபடியே

பெருஞ்செலவு செய்தல், பேருடைமை, நாகரிகமா யிருத்தல், ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தல் இவை எல்லாம் ஆண், பெண் இருவருக்கும் சேர்ந்து என்ன தொடர்பு? இவை எளியனவற்றைத் தடை செய்யும், எளிமையைத் தடுக்கும், இயற்கை நெறியைப் புலப்படச் செய்யாத சுமைகள்தாம்

மிகவும் குறைந்தது போலவே மிகுதி என்பதும் இடர்ப்பாடானது அதிகமிருந்தால், சிக்கனத்தைக் கடைபிடி, எளிமையைப் பெருமைப்படுத்து ஆணும் பெண்ணும் அம்மணமாய்க் கூடுகின்றனர் உள்ள படியே அவர்கள் வெளிப்படுவதுதான் பெரிய மேன்மையாகும்

45. வெறுமையைத் தழுவல்

எது இல்லையோ, அது வெறுமை. எது உள்ளதோ, அது வெறுமையில் தழுவப்படுகிறது. எப்போதும் ஆணுக்கப்பால், உலகின் வெறுமையான பெண் இருக்கிறாள்.