பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 65


81. ஒன்றிலிருந்து மற்றொன்று

ஒன்றிலிருந்து மற்றொன்று வருவதாய் அறிவர்கள் கூறுகின்றனர். பெண் ஆணிலிருந்தும், ஆண் பெண்ணிலிருந்தும் தோன்றுகின்றனர்.

எப்போதும் வெளிப்புறம் உட்புறத்திலிருந்துதான் தொடர்கிறது ஆண் முதலில் தன்னை அறிந்த பின் தான் பெண்ணை அறிகிறான் இது போலத்தான் பெண்ணும் தன்னை உணர்ந்து கொள்கிறாள், பிறகு மற்றவரை அறியலாம்.

பிரிவிலிருந்துதான் சேர்க்கை தோன்றுகிறது சேர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள பிரிவிலிருந்து தொடங்கு. இம் முறையில் பிரிவும், சேர்க்கையும் இருக்கக் கூடும்.

82. கோணலும் வட்டமும்

இணைந்திருப்பதும், தனித்திருப்பதும் ஒன்றாகத் தான். பிரிவும், சேர்ந்திருப்பதும் பிரிந்து செல்கின்றன இரண்டும் தனியாக இருக்க எவ்வாறு இவை ஒன்றாகும்? இணைந்திருப்பதில் பிரிவும், பிரிவில் இணைந்திருப்பதும் எங்கே?

பிரிந்திருக்கும் போது இணைந்திரு இணைந்திருக்கும்போது பிரிந்து இரு ஒன்றாக இருக்க