பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


உள்ள போது, ஒருவருக்கொருவர் சேர்ந்திருப்பதில் தனித் தன்மை உடையவர்கள் ஆனால் மற்றவர்களிடம் ஒரே தன்மைபோல இருப்பதில் பொதுவானவர்கள்

ஒவ்வோர் இருவரிலும், இருவரும் ஒருவராக ஆகின்றனர் இருவரை எது இணைக்கின்றதோ, அதுதான் ஒவ்வோர் இருவரையும் பிணைக்கிறது அதுவே எல்லோரையும் சேர்த்துவைக்கிறது ஒவ்வோர் இருவரிடமும் எல்லாமே புரிந்து கொள்ளச் செய்கிறது

ஒவ்வோர் இருவருக்கும் எல்லாமே கிடைக்கிறது. ஒவ்வோர் இருவர் மூலம் 'இயற்கை நெறி' காணப்படுகிறது ஒருவருக் கொருவர் தழுவிக் கொள்ள எல்லாமே தழுவப்படுகிறது. வேறு எப்படி இயற்கையைத் தழுவ முடியும்?

85. மூன்றாவது மனம்

இரு மனங்களின் பிரிவில் மூன்றாவது மனம் தான் இணைந்திருப்பதை அறிகிறது

மூன்றாவது மனம் என்பதை எந்த ஒரு மனமும் விளக்கம் தர முடியாது. ஆனால் ஒவ்வொரு மனமும் இணைந்திருப்பதைக் கேட்கும் போது மூன்றாவது மனத்தை உணர்கிறது. அது வெளியே உள்ளதை