பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



92 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


பட்ட சமமானவர்களாகச் சந்திப்பார்கள் அவன் அவளுக்குத் தங்கியிருக்கும் நீர் போலப் வலுவாா யிருப்பான் அவள் அவனுக்கு நகரும் நிலம் போலப் வலுவாயிருப்பாள்

112. வன்மையின் வழியில்

தனது வன்மையைப் பெண்ணின் மென்மையையும் வெறுமையையும் வெல்கிறது என ஆண் அறிய வேணடும்.

தனது மென்மையுடனும் வெறுமையுடனும் பெண் ஆணை, அவனது பலம், வன்மைக்காகத் தேடுகிறாள். அவனைத் தன்னை நிரப்பி, வலுவூட்டி அதன் வழி அடங்கத் தேடுகிறாள்

ஆண் பெண்ணின் நளினத்தின் மூலம் மென்மை அடைகிறான். பெண் ஆணின் வன்மை மூலம் வல மடைகிறாள்

113. மென்மையின் வழியில்

தனது மென்மை ஆணின் வன்மையையும், பலததையும் வெல்கிறது எனப் பெண் தெரிந்து கொள்ள வேண்டும்

தனது பலம், வன்மை இவற்றால் ஆண் பெண்ணை அவளது மென்மையை, வெறுமையைத் தேடுகிறான்.