பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

யாரே! ஒரு பாட்டுப் பாடேன்!” என்று கேட்டுக் கொண்டது நரி,

என்ன ஆச்சரியம்!

இப்போது காகம் பாடத் தொடங்கியது. பங்து வராளிப் பாட்டு அது.

பாவம் நரியின் முகத்தில் ராஜகளைக்குப் பதிலாக அசட்டுக்களை வழிந்தது. அது கோட்டை கட்டினமாதிரி, காக்கை வைத்திருந்த முறுக்கு கீழே விழவில்லை. அந்த முறுக்கைக் கிளையில் செருகிவைத்து விட்டுத்தான் அது பாடத்தொடங்கியது! "பாவம், நரியார் ஏமாந்து விட்டார். இல்லையா ராஜா நரியாரே!" என்று கையாண்டி செய்தது.

நரி உறுமியது. "வா, உன்னை ஒரு கை பார்க்கிறேன்!” என்று ஊளையிட்டது.

இப்போது நீ ஏமாந்தாயல்லவா இந்தச்சம்பவத்தை மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள். அப்புறம் என்னை ஒரு கை பார்க்கலாம். ஒரு முறை ஏமாந்து விட்டால், எப்போதுமே ஏமாந்து கொண்டேயிருக்க வேண்டுமென்று சட்டமா, என்ன? உன் ஜம்பத்திற்கு நான் ஆளில்லை!’ என்று நிதானம் கெடாமல் எச்சரித்தது காக்கை.

காக்கை மீதிருந்த கடுங்கோபத்தை தான் கொணர்ந்திருந்த மீதமிருந்த இறைச்சியின்மீது காட்டியது நரி.