பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நடத்தத் தொடங்கிவிடும் வனவிலங்குகள் என்ற பயம் அதற்கு உள்ளுற இருந்தது.

ஒருநாள், ராஜா. நரியார் வேட்டைக்குச் சென்றது. நல்ல தேட்டை கிடைத்தது. புசித்ததுபோக, மிகுதியைச் சுமந்துகொண்டு தன் அரண்மனைக்குத் திரும்பியது.

அப்போது வழியில் அது காக்கைப் பிரதிநிதியைச் சந்தித்தது. காக்கை முறுக்கு ஒன்றை வாயில் கவ்விக் கொண்டிருந்தது. காகத்தை அவமானப்படுத்தி ஏமாற்ற எண்ணமிட்டது. காகம் தனக்கு வணக்கம் சொல்லாதது கண்டு மேலும் சினம் கொண்டது நரி. ஆனாலும் நரியல்லவா அது? அந்தச் சினத்தை அடக்கிக் கொண்டது. காகத்தை ஏமாற்றிய தன் மூதாதையரின் கதையை மீண்டும் நினைவூட்டிக் கொண்டபடி, காக்கை யாரே! காக்கையாரே! சுகமா?’ என்று குசலம் விசாரித்தது.

என்ன ஆச்சரியம்:

காக்கை பதில் எதுவும் சொல்லவில்லை.

ராஜாவான நரியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை காக்கை !

காக்கைமீது கொண்ட ஆத்திரம் இன்னும் கொள்ளவில்லை. கய்மர்ன் பாவனையுடன், காக்கை