பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


அன்று என் தந்தை அயலூர் சென்றிருந்தார்.

வீட்டில் நான் மட்டும்தான் காவல்.

என்னிடம் யார் நெருங்க முடியும்?

ஆனால் அதிசயம் போல, நடுச்சாமத்தில், அதே கோமாவரம் கருப்பையா முகமூடி அணிந்து கொண்டு என் முன்னே தோன்றி விட்டான் !

அவனைக் கண்டதும் எனக்குப் புதிய பலம் ஊறியது.

அவனை "யார் நீ?" என்று வினவினேன்.

அவன் உள்ளதை உள்ளபடி சொன்னான்.

எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

"திருடுகிற இந்த ஈனப் பிழைப்பைச் செய்ய உன் மனம் கூசவில்லையா ?”

"கூசுகிறது. ஆனால், என் பசிக்கு யார் பதில் சொல்வதாம் ?"

"உழைத்துப் புசிப்பதுதானே ?"

"திருடனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?"

"நான் அப்பாவிடம் சொல்லி உனக்கு வேலை போட்டுத்தருகிறேன். இன்றுபோய் நாளை வா!..."

"சரி. இன்று இங்குள்ளதை அபகரித்துக் கொண்டு நாளைக்கு நல்லவனாகத் திரும்பிவருகிறேன்.”

"என்ன திமிர் உனக்கு?... கேலி பேசுகிறாயா ?”

"இல்லை, உண்மை பேசுகிறேன்!"