பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

விளையக்கூடும் என்று கருதியே, முதலில் கிழவனாக மாறுவேஷம் பூண்டேன். பிறகு உங்கள் மகனை உடனடியாகக் காணாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்படவே, இன்று இப்படி உங்கள் மகனாக நாடகம் போட்டேன். அதன் மூலமாகிலும் நான் என் அரசரை—தங்களை உயிர் பெற்றெழச் செய்துவிடலாம் என்ற நப்பாசைதான் காரணம். சோதனை நடத்தினீர்கள். மந்திரவாள் ரகசியத்தை நீங்கள் தானே எனக்குச் சொன்னீர்கள். வேந்தே! பராசக்தி, உங்கள் மைந்தனை—எங்கள் இளவரசரைக் கொணர்ந்து விட்டிருக்கிறார். பிரபுவே, என் தவறை மன்னியுங்கள். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்...”என்று மண்டியிட்டு வங்ணகினான் ரவிசேகரன் மன்னர் மன்னன் முன்னிலையில்.

“ரவிசேகர்! உன் ராஜ அபிமானத்தைப் போற்றுகிறோம். இதோ, எங்கள் குலவிளக்கான தேவி பராசக்தியின் வாளை உனக்குப் பரிசாக அளிக்கிறோம். இனி நீதான் என் மைந்தனின் அந்தரங்க உயிர்த் தோழன்...!” ஆனந்தக் கண்ணீ ருடன் கூறினான் வேந்தன்.

இளவரசர் ராஜேந்திரபாலன் ரவிசேகரனைத் தழுவியவாறு நன்றி தெரிவித்துக் கொண்டார்!