பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

16. கிறிஸ்துவமும் திரு.வி.கவும்

வெஸ்லி கல்லூரியில் திருவி.க. படிக்கத் தொடங்கிய நாள் முதல், பைபிலுடன் அவருக்குத் தொடர்புண்டாயிற்று. வகுப்பில் அதையும் ஒரு பாட மாகப் படித்து வந்தார். ஞாயிறு வகுப்புகளுக்குச் செல்வார்; போதனை கேட்பார். கோயிலுக்குப் போவார்; அங்கே பாதிரியார் பேச்சுக் கேட்பார்; எதன் பொருட்டு: பரிசில் பெறும் பொருட்டு, அங்காள் பைபிலின் பொருளில் அவர் மனம் படியவில்லை. பைபில் எழுத்தையே பயின்றார்.

கிருஷ்ணராவ் என்பவர் ஐந்தாம் பார ஆசிரியர். அவர் வகுப்பில் வாதத்துக்கு இடமளிப்பார்; பைபில் வகுப்பு, வாத சபையாகும். ஆசிரியருடன் வாதம் புரிவார் திரு. வி. க. மாணவர் பலரும் வேடிக்கை பார்ப்பர். பைபில் வகுப்பை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர்.

அச்சமயம் கதிரை வேற்பிள்ளை வெஸ்லி கல்லூரி யில் தமிழாசிரியராக இருந்தார். கிருஷ்ணராவ் விடுக்கும் சிக்கலான கேள்விகளுக்குப் பதில் கதிரைவேற் பிள்ளை யிடம் கேட்டு வந்து கூறுவார் திரு.வி.க.

கிறிஸ்துவப் பாதிரிமார் பேசும் கூட்டங்களுக்குத் திரு.வி.க அடிக்கடி செல்வார். கிறிஸ்துவத்தின்