பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

அழுகையும், மன்னிப்பும் மலிந்த மாணிக்க வாசகர் மொழிகள் ஒன்றன்பின் ஒன்றாக அவர் உள்ளத்தில் தோன்றின. மாணிக்க வாசகரின் திருவாசகமும் கிறிஸ்துவின் சுவிசேஷமும் கருத்தில் ஒன்றாகவே விளங்கின.

அச்சமயத்தில் இராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவிலே ஒரு சிறு சங்கம் தொடங்கப்பட்டது. பெந்த கொஸ்தே சங்கம். முறையீட்டாலும், அழுகை யாலும், தம்மைப் பண்படுத்திக் கொள்வோர்க்குப் பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானம் கேரே கிடைக்கும் என்று அச்சங்கத்தினர் கூறினர். அவ்வாறு ஞான ஸ்கானம் பெற்றவர் தம் பாவச் செயல்களைப் பிதற்றி வெளியிடுவர் என்றனர். அவர்தம் பேச்சு திரு.வி.கவை ஈர்த்தது.

அட்மினிஸ்ட்ரேட்டர் சுப்பிரமணியம் என்பவர் கிறிஸ்துவரானர். அதனுல் அவர் இங்கிலாந்து சென்று பாரிஸ்டராகிப் பெரும் பதவியில் வீற்றிருந்தார். திரு.வி.க மாணுக்கராயிருந்தபோது ஒராண்டு பரிசில் வழங்க அவர் அழைக்கப்பட்டார். எல்லாரும் அவரைப் புகழ்ந்து பேசினர்.

‘காமும் கிறிஸ்துவம் தழுவினுல் சுப்பிரமணியம் போலாகலாம் என்று எண்ணினர் திரு.வி.க. ஆனல் அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. காரணம் தம் பெற்றாேர் பால் கொண்ட அன்பு. பெற்றாேர் பால் அவர் கொண்ட அன்பு பிறமதம் தழுவலுக்கு இடம் தரவில்லை.

இந்து மதத்தில் உள்ள சாதிக் கட்டும், சமயக் கட்டும், மூட கம்பிக்கையும் கண்மூடி வழக்க ஒழுக்கங் களும் பிறவும் கிறிஸ்துவம் தழுவுமாறு திரு.வி.கவைத்