பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

17. சீர்திருத்தமும் திரு.வி.க.வும்

சிாதி கருதும் குடியிலே பிறந்தவர் திரு.வி.க. இளமையில் சாதி எண்ணத்துடனேயே வளர்ந்தார் அவர். அவ்வெண்ணம் நீண்ட காள் அவர் கெஞ்சில் நிலைத்து கிற்கவில்லை. அஃது இளமையிலேயே பட்டுப் போயிற்று. அவ்வாறு பட்டுப் போதற்குக் காரணமாய் கின்றது எது? இளமையிலேயே அவர் கிறிஸ்துவருடன் நெருங்கிப் பழகியதே. கிறிஸ்துவக் கூட்டுறவு அவர் தம் சாதிப் பேயை ஒட்டியது.

ஐப்பசித் திங்கள். கெளரி கோன்பு காள். பிச்சைக் காரன் ஒருவன் வீடுதோறும் நுழைந்து வந்தான். கோன்பு நாளன்றாே? எவர் பிச்சையிடுவர்? எவரும் பிச்சை போட்டிலர். பிச்சைக்காரன் கண் பஞ்சடைந்து குழிவிழுந்து பசியால் வாடினன். கண்டார் திரு.வி.க; அவர் உள்ளம் குழைந்தது. -

உள்ளே சென்றார். எவரும் அறியாமல் அதிரசங் கள் சிலவற்றை எடுத்து வந்தார். பிச்சைக்காரனுக்குத் தந்தார்.

முன்னுளில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாக் கூட்டங்களில் சாதிச் சைவம் தலைவிரித்தாடும்.

தி.-10