பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

19. நாவன்மையும் திரு. வி. க. வும்

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஒன்பதாம் ஆண்டு. சுயமரியாதை இயக்கம் உச்ச நிலையில் இருந்த காலம். பெரியார்-திருவி.க. போராட்டம் தீவிர மாக கடந்த காலம். திராவிடன்’ பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர் ஜே. எஸ். கண்ணப்பர். பெரியார் இயக்கத்துக்கு உறுதுணையாக கின்றான் திராவிடன்’

தற்போது விருது நகர் என்று அழைக்கப்படும் ஊர் அப்போது விருதுபட்டி எனும் பெயரால் அழைக் கப்பட்டு வந்தது. அந்த ஊரிலே தலை நிமிர்ந்து கின்ற கட்சிகள் இரண்டு. ஒன்று காங்கிரஸ்; மற்றாென்று. பெரியார் கட்சி.

அந்த ஊரிலே ஒரு வாசகசாலை. அதன் பெயர் இரத்தினசாமி நாடார் வாசக சாலை என்பது. அதன் ஆண்டு விழாவுக்குத் தலைமை ஏற்குமாறு வேண்டித். திரு. வி. க.வுக்கு அழைப்பு வந்தது. திரு. வி. க.வும் தலைமை ஏறக ஒப்புக்கொண்டார்; ஒப்புக் கொண்ட பணியாற்ற விருது ககர் சென்றார்.

பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும் மணம் பூண்டி குமாரசாமியாரும் அவ்விழாவில் பங்கு கொண்