பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

157

அப்போது ஒருவர் திராவிடன் பத்திரிகையைத் திரு. வி. க.விடம் நீட்டினர். கண்டார் திரு. வி. க.

திராவிடன் தாங்கி வந்த செய்தியைக் கூட்டத் தில் படித்தார். பின்னே பத்திரிகை உலகின் பொய்ம் மைப் படைப்புக்களை விவரித்து விளக்கினர். அங்கிஜல யில் கூட்டத்தில் சலசலப்பு’க் கண்டது. குழப்பம் மூண்டது.

கண்டார் திரு. வி. க. எழுந்து கின்றார். ‘எனக்கு இரண்டு கலைகள் ஒடுகின்றன. ஒன்று காந்தி கஜல. மற்றாென்று திலகர் கலை. இப்பொழுது காந்தி கஜல யைத் திலகர் கலையில் ஒடுக்கிவிட்டேன். இப்பொழுது கான் பேசப் போவது அஹிம்சை அன்று. போர்: போர்! போர் செய்ய எழுங்கள்! எழுங்கள் என்று உங்களை அழைக்கிறேன். புல்லர் கூட்டம் ஒன்று: இங்கே குழப்பம் செய்ய வந்துளது. அவர்களிடம் தடிகள் இருப்பது கண்டு அஞ்ச வேண்டாம். உங்கள் கைகள் எங்கே போயின? எவரேனும் தடியை எடுப் பரேல் பாய்ந்து அவர்தம் தடியைப் பிடுங்குங்கள். தாக்குங்கள்; தா க் கி த் தாக் கி வீழ்த்துங்கள்! விரட்டுங்கள் ஒட்டுங்கள்” என்று உரத்த குரலில் முழங்கினர். நீண்ட கேரம் முழங்கினர். கூட்டத்தினர் எழுச்சி பெற்றனர். கண்டது காலிக் கூட்டம். பூனை போல் பதுங்கியது. வெற்றி வீரர் திரு. வி. க. சுமார் மூன்று மணிநேரம் பேசினர். கூட்டம் அமைதியாக நடைபெற்றது. மிக அமைதி.

வாசக சாலை அன்பாகள் திரு. வி. க. வைப் பாராட்டினர்கள், காங்கிரஸ் அன்பர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அன்பர் கூட்டம் திரண்டு வந்து