பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164

மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கோவிந்த ராஜர்.

ஒருநாள் அவர் திரு.வி.க.வைக் காண வந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சி லிருந்து என்ன கண்டார் திரு.வி.க: கண்பர் ஏதோ கஷ்டத்தில் உள்ளார் என்று கண்டார். உள்ளே சென்றார். பெட்டியில் துரங்கிக் கொண்டிருந்த கெளரி சங்கத்தை எடுத்து வந்தார். கோவிந்தராஜரிடம் கொடுத்தார். “இதை வைத்துக்கொள். எனக்கு உபயோகப்படவில்லை. உனக்கு உபயோகப்படும்’ என்றார் திரு.வி.க. அதைப் பெற்றுக்கொண்டு போனர் கண்பர்.

பர்மா மலேயா முதலிய காடுகளில் வதிந்த தமிழர் பலர் திரு.வி.க.வின்பால் பேரன்பு கொண்டிருந்தனர். அவர்கள் தாய் காடு திரும்புங்கால் தங்கள் அன்புக்கு. அடையாளமாக திரு.வி.க.வுக்கு ஏதேனும் கொண்டு வருவர். கல்ல கல்ல படுக்கைகளும் தலையணைகளும் கொண்டு வந்து தருவர் சிலர். கம்புகள் கொணர்வர் மற்றும் சிலர். விசிறிகள் கொண்டு வருவர் வேறு சிலர். ஆனல் அவை திரு.வி.க.வுக்குப் பயன்படா. அவற்றிற் கென்று ஒருவர் வருவர். பெற்றுச் செல்வர்.

அழகிய வெல்வெட்டு மெத்தையும் தலையணை ஆம் கொண்டு வந்து கொடுத்தார்: ஓர் அன்பர். அது வந்த வாரத்திலேயே புலவர் ஒருவர் திரு. வி. கவைக் காணவந்தார். அவர் மனம் வெல்வெட்டுப் படுக்கை மீது சென்றது. புலவரின் உள்ளக் கருத்தை உய்த் துணர்ந்தார் திரு. வி. க. விலை உயர்ந்த அந்த வெல் வெட்டுப் படுக்கையை அப்புலவருக்குக் கொடுத்து விட்டார்.