பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

ஆரியன் பிரைமரி பள்ளியில் பிளவு தோன்றியது; குழப்பம் தலை காட்டியது. கலியாண சுந்தரனரின் கல்வி தடைப்பட்டது. நான்கு மாதம் வீணில் சென்றது. 1894ம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் சேர்ந்தார்; நான் காம் வகுப்பிலே சேர்த்துக் கோள்ளப்பட்டார்.

அவரது உடல் பருமனுக இருந்தது. கழுத்திலே தசைகள் மடிப்பு விட்டிருந்தன. எனவே, சிறுவர் பலரும் அவரைப் பொதுக்கன்’ என்று எள்ளி நகையாடினர்.

அவரது சதையைக் குறைக்க எண்ணினர் தங்தை யார்; மருந்து எண்ணெய் சாப்பிடச் செய்தார்.

அஃது ஒரு சாமியாரின் முறை பற்றியது. பத்தியம்; கடுமையான பத்தியம்.

ஒரு நாள் நண்பர்கள் கொண்டுவந்த உளுந்து வடையைத் தின்றுவிட்டார் கலியான சுந்தரஞர். பத்தியத்தை மறந்துவிட்டார். பிறகு பத்திய கினைவு தோன்றியது. என் செய்வது? பெற்றேரிடம் வாய் திறந்தாரல்லர். காரணம் அச்சம்.

உளுந்து வடை என் செய்தது: காலை முடக்கியது. பள்ளி சென்று திரும்புகையில் கீழே வீழ்ந்தார். வண்டிக்காரர் ஒருவர் அவரைத் தம் வண்டியில் ஏற்றிப் போய் வீட்டில் சேர்த்தார்.

வீடு சேர்ந்த சில மணி நேரத்துக்குள் கையும் முடங்கியது. தமது மகனின் கிலையைக் கண்டார் தந்தையார். மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். அவர் பெயர் அயோத்தி தாஸ் பண்டிதர். இராயப் பேட்டையில் புகழ் பெற்ற மருத்துவர் அவர். கலியான சுந்தரனரின் முடக்கு நோய் தீர்க்கப் பெரும்பாடு பட்டார் அவர். அவரது முயற்சி பயன் அளித்தது. முடக்கு