பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

1904-ம் ஆண்டு. மெற்றிகுலேஷன் வகுப்பை அடைந்தார் கலியாண சுந்தரம். படிப்பின் மீதிருந்த வேட்கை குறைந்தது. கதிரை வேலர் என்ற காந்தம் இழுத்தது.

கதிரை வேற்பிள்ளை மீது வழக்கு ஒன்று தொடரப் பட்டது. வழக்குத் தொடுக்கப்பட்ட நீதி மன்றம் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்.

வழக்குத் தொடுத்தவர் இராமலிங்க சுவாமிகள் சார்பினர்.

அதே சமயத்தில் மற்றாெரு வழக்கும் எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடை பெற்றது. எழும்பூர் வழக்கில் கலியாண சுந்தரருைம் சாட்சி கூறவேண் டியவர் ஆர்ை.

பாதி நாள் பள்ளியிலும் மற்றப் பாதிகாள் கோர்ட் டிலும் கழித்தார் கலியான சுந்தரம். வழக்கு வேடிக் கையே பெரிதாயிற்று.

செலக்ஷன் பரீட்சை நெருங்கியது. இரண்டு அரை காள் பரீட்சையில் அமர்ந்து எழுத இயலாத கி2ல நேர்க் தது. சோதனையின் முடிவு என்ன? கலியான சுந்தர ைைர மெற்றிகுலேஷன் பரீட்சைக்கு அனுப்ப மறுத்து விட்டார் பிரின்சிபால்.

“இன்னும் ஓராண்டு படிக்க வேண்டும். சென் னையை விட்டு வேறு எங்காவது போகலாம். மன்னர் குடியிலாவது, திருவள்ளுரிலாவது இருந்து படிக்கலாம். வேண்டிய வசதி எல்லாம் மிஷன் செய்து கொடுக்கும்’ என்றார் பிரின்சிபால்.