பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

விளக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான் ரத்தினம் வாழ்த்தினர்.

மணவழகனுரின் இல்வாழ்க்கை தொடங்கியது. அவ்வாழ்க்கை, நீண்ட நாள் கடைபெறவில்லை. ஆறே ஆண்டுகள்.

கலியாண சுந்தரனரிடம் கமலாம்பிகை செய்து கொண்ட முதல் விண்ணப்பம் கல்வி பற்றியது.

‘எனக்கு நகைகள் இருக்கின்றன. என் அன்னையா ரின் விலை உயர்ந்த புடவைகள் பல இருக்கின்றன. யான் என்ன கேட்டாலும் வாங்கித்தரப் பெரிய தந்தை யார் இருக்கிறார். ஆதலின் உங்களிடம் யான் விரும்பு வது கல்வியே’ என்று கூறினர் கமலாம்பிகை.

அவர் விரும்பியவாறே தமிழ் நூல் கற்பிக்க முயன்றார் திரு. வி. க. ஆல்ை கலியாண சுந்தரனரின் அன்னையார் அதனை விரும்பினர் அல்லர்.

அன்னையார் கல்லவர். ஆனல் கர்நாடகம்’. காலப் போக்கை அறியாதவர். என் செய்வது? கமலாம்பி கைக்கு இரவில் போதனை செய்யலானர் திரு. வி. க.

  • யான் தி ரு க் கு ற ள் படித்தவன். என்பால் பிடிவாதம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறுக் திருக்குறள் படிப்புத் தீக்குணங்களை அறவே களையவில்லை. கமலாம்பிகை யின் ச்ேர்க்கை, அக்குணங்களைப் படிப்படியே ஒடுக் கியது. அவள் திருக்குறள் படித்தவள் அல்லள். எனக்கு அவளே திருக்குறளாக விளங்கிள்ை. மனை வாழ்க்கையில் ஈடுபடப்படத் திருக்குறள் நுட்பம்
  • திரு. வி. க. வாழ்க்கை குறிப்புக்கள்.