பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

விளங்குவதாகிறது. திருவள்ளுவர் உள்ளத்தை உணர்தற்கு மனைவாழ்க்கை இன்றியமையாதது என்பது உள்ளங்கை கெல்லிக் கனியாயிற்று.” என்று குறிப்பிடுகிறார் திரு. வி. க.

சின்ன வயதில் திரு. வி. க.வுக்குப் பொறுமை சிறிதும் கிடையாது. திருமணத்துக்குப் பின் பொறுமையாளர் என்று பலராலும் போற்றப்பட்டார் .F} 6Y{9

“என்பால் பொறுமை பொலிவது உண்மையானுல் அஃது எனது இயற்கையினின்றும் அரும்பியது ஆகாது. அது, கமலாம்பிகையினின்றும் என்பால் இறங்கிக் கால் கொண்டது என்று யான் சொல்வேன்’ என்கிறார் திரு. வி. க.*

கமலாம்பிகைக்குப் பெரும் காப்பியங்கள் போதிக்க விரும்பினர் திரு. வி. க. அதற்கு வீடு இடந்தரவில்லை. தனிக் குடித்தனம் செய்தால் பெருங் காப்பியங்கள் போதிக்க இயலும் என்று கருதினர் அவர் அதற். குரிய முயற்சியில் ஈடுபட்டார்.

கமலாம்பிகை அதற்கு உடன்பட்டாரா? இல்லை. குடும்பத்தினின்றும் நாமே வலிந்து பிரிவது நமது வாழ்க்கைக்கு இழிவு தேடுவதாகும். கல்வியினும் குடும்ப ஒற்றுமையே பெரிது. இப்பொழுது இரவிலே கொஞ்சம் கொஞ்சமாக நான் படித்து வருவது போதும். என் பொருட்டு நீங்கள் பிரிவை நாடுவது தர்மமாகாது” என்று பன் முறை அறிவுறுத்தினர். திரு. வி. க.வின் மனம் உவகைக் கடலாடியது. மனைவியின் விருப்பத் துக்கு மாருக அவர் கடந்தாரல்லர்.

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கிள்.