பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

9. ‘நவசக்தி'யும் திரு.வி.கவும்

தேசபக்தன விட்டு விலகினர் திரு. வி. க. என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. புதிய தினப் பதிப்பு ஒன்று தொடங்குதல் வேண்டும் என்று தக்தி கள் பறற்து வந்தன; கடிதங்கள் வந்து குவிந்தன. சிலர் கேரில் போந்தனர்; ஊக்கமூட்டினர்.

சென்னை பக்கிங்ஹாம் கர்காடிக் மில் தொழி லாளர் ஐயாயிரம் ரூபா கிதி திரட்டித் திரு. வி. க.வுக்கு அளித்தனர்; பத்திரிகை தொடங்குமாறு வேண்டினர். வேறு சில நண்பர் இரண்டாயிரம் ரூபா திரட்டித் தந்தனர். மொத்தம் ஏழாயிரம் ரூபா கிடைத்தது.

ஓர் அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. ஒரு வாரப் பத்திரிகையும் தொடங்கப்பட்டது. அச்சுக் கூடத்துக் குச் சாது அச்சுக்கூடம் என்று பெயர் சூட்டினர். வாரப் பதிப்புக்கு கவசக்தி” என்று பெயர் சூட்டினர்.

கவசக்தி’ முதல் சிலம்பு-முதல் பரல்-1920ம் ஆண்டு அக்டோபர் 22ந் தேதி வெளி வந்தது.

திரு. வி. க. ‘தேச பக்தன்’ ஆசிரியராயிருந்த போதும் ஒருவித நோக்கம் கொண்டே தொண் டாற்றினர். கோக்கத்தில் எவ்வித வேறுபாடும்