பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

இல்லை. கவசக்தி'யிலும் அவ்வாறே. பின் வேறுபாடு எங்கே? வளர்ப்பு முறையில் வேறுபாடு நிகழ்ந்தது. ஏன்? தேச பக்தன் தினப்பதிப்பு. நவசக்தியோ வாரப் பதிப்பு. ஆதலின் வளர்ப்பு முறையை வேருக்க நேர்ந்தது.

கதேச பக்தன் மகன். நவசக்தி’ மகள். தேச பக்தன்’ லிமிட்டெட்டுள் புகுந்தவன், நவசக்தி: அதில் புகாதவள். தேச பக்த'னில் பெரிதும் அழிவு வேலை நடந்தது; கவசக்தி'யில் பெரிதும் ஆக்க வேலை கடந்தது.

ஆவேசமும் பரபரப்பும் தேசபக்த'னில் அலைக்தன. அன்பும் அமைதியும் கவசக்தி'யில் தவழ்ந்தன. தேச பக்தன் அதி தேவதை ருத்ரன்; எழுதுகோல் பாசுபதம். *கவசக்தி'யின் அதி தேவதை சிவம்; எழுதுகோல் குழல். தேச பக்தன்’ கடையில் காளி; கவசக்தி கடையில் உமை.

அங்காள் கவசக்தி'யில் அரசியலே பெரும் இடம் பெற்று வரும். இடையிடையே சமூக சீர்திருத்தம் பெண் கலன், மொழிச்சிறப்பு, கலையாக்கம் முதலியன முகிழ்க்கும். இறுதியில் கவசக்தி’ சன்மார்க்கமும் சமதர்மமும் கமழ்ந்தாள். -

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தி இரண்டாம் ஆண்டு காங்கிரஸில் சுயராஜ்யக் கட்சி தோன்றியது. அக்கட்சியைத் தோற்றுவித்தவர் தேசபந்து சி. ஆர். தாஸ்.

சுயராஜ்யக் கட்சியால் காங்கிரஸ் அழியுமோ என்ற ஐயம் தோன்றியது. எனவே, காங்கிரசுக்கென்று தினப்

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.

தி.-6