பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82

பதிப்பு ஒன்று வேண்டும என்ற எண்ணம் பரவ லாயிற்று.

இங்கிலையில், தமிழ்நாட்டுக் காங்கிரஸ். கூட்டம் மதுரையில் நடைபெற்றது. காங்கிரசுக்கென்று காங் கிரஸ் சார்பில் தினப்பதிப்பு ஒன்று தமிழில் வெளியிடு வது என்றும், அதன் பொருட்டுப் பத்தாயிரம் ரூபாய் வழங்குவது என்றும் தீர்மானம் கிறைவேற்றப்பட்டது. அந்தப் பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு கவசக்தி'யைத் தினப்பதிப்பாக வெளியிடுமாறு பலர் திரு வி.க.வை வற்புறுத்தினர்.

திரு.வி.க. இணங்கினர் அல்லர். அவ்விடத்தி லேயே மறுத்துவிட்டார். அம்மறுப்பு கண்டு சீறியவர் பலர். குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்; இன்னொருவர் பெரியார் ஈ. வே. ரா.

ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு அந்தப் பத்தா யிரம் ரூபாயை வாங்கிக் கொண்டார், ஸ்வராஜ்யா’’ என்றாெரு தமிழ் தினசரி கடத்தினர். அப்பத்திரிகை நீண்ட காள் கடைபெறவில்லை; கிறுத்தப் பெற்றது. ஸ்வராஜ்யா கம்பெனிக்கும் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கு மிடையே சட்டப்போர் கடந்தது.

தமிழ்நாட்டுக் காங்கிரசிடம் பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு பத்திரிகை கடத்த ம றுத்தாரே திரு.வி.க. அஃது எத்தகைய சிறப்பான ஒன்று?

பெரியார் ஈ. வே. ரா. ஈரோட்டினின்றும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் திரட்டி வந்தார். :நவசக்தி'யைத் தினப்பதிப்பாக்குமாறு திரு.வி.கவை வற்புறுத்தினர். தினப்பதிப்புக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் போதாது