பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

11

இடிப்பதினாலேயே குளம் நிறைந்துவிடுவதில்லை. மழை பெய்தால்தான் குளம் நிறையும். இதை மற்றவர்கள் உணராவிட்டாலும் கோடையிடிப் பேச்சாளர்களாவது உணர்வது நல்லது!

"யார் பெரியர்?" என்பது ஒரு கேள்வி. இதற்குப் பலர் பலவாறு விடைகூறுகின்றனர். நாமே ஒருகாலத்தில் பணக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். அடுத்து நிலக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். பின் படித்தவர், பட்டம் பெற்றவர், பதவீயிலிருப்பவர் பெரியவர் என எண்ணினோம். கொஞ்ச காலத்துக்குமுன் எழுத்தாளரையும் பேச்சாளரையும் பெரியவர் எனக் கருதினோம். இப்போது வயதுமுதிர்ந்த கிழடுகள்தாம் பெரியவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். திருவள்ளுவர் உள்ளம் இவற்றில் எதையும் ஒப்பவில்லை. யார் பெரியர்? என்ற கேள்விக்கு அவர் கூறுகின்ற விடை பணத்தர் அல்லர்; நிலத்தர் அல்லர்; படித்தர் அல்லர்; எழுத்தர் அல்லர்; பேச்சர் அல்லர்; "செய்வார் பெரியர்" என்று கூறுகின்றார். இவ்வுண்மையை,

        "செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
         செயற்கரிய செய்கலா தார்" (26)

என்னும் குறளால் அறியலாம். இதிலிருந்து வயதில் பெரியவர்கள் ஆனாலும், செயல்திறன் இல்லாதவர்கள் சிறியவர்களே என்று தெரிகிறது.

மனுநீதியில் பிறப்பை முன்வைத்து உயர்வு தாழ்வு கூறி, பெரியவர் சிறியவரைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒளவையார் அறத்தை முன் வைத்து "இட்டார் பெரியோர் இடாதார் சிறியோர்" எனக் கூறியுள்ளார். வள்ளுவர் செயல்திறனை முன்வைத்துச் "செய்வார்