பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயமை

23


பிற் பிணிப்பர் கயத்தைச் சான்றோரை நயத்திற்பிணித்து விடல்” என்பதே. இது கயத்தையும், நயத்தையுங் காட்டுவதோடு நமக்குள் ஒரு பயத்தையும் உண்டு பண்ணி விடுகிறது.

நூற்றியெட்டை மறவாதீர்கள். எப்போதும் விழிப்பாயிருங்கள். உங்கள் உள்ளத்தில் அதுகளை துழைய விடாதீர்கள். உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, வீட்டில், வீதியில், நாட்டில், நகரில் உள்ள எவ்விடத்திலுமே இக் கீழ்களை நுழையவிடாதீர்கள். எங்கேனும் கண்டு விட்டால் உடனே விலகுங்கள்.

கயமைக் குணம் உடையவரை வெறுக்கக் கற்றுக் கொள்ளுவதும், நம் உள்ளத்திலேயே அக் குணம் தோன்றுவதாக நமக்குத் தோன்றினால் வெட்கித் தலைகுனிவதும் ஒரு பண்பு ஆகும். நாடு நலம் பெற மக்கள் நல்வாழ்வு வாழ, நாம் அனைவரும் இந்நற்றொண்டைச் செய்தாக வேண்டும். இன்றேல் இவ்விரண்டுமே கீழ் ஆகிவிடும்.

கயம் நுழையும் உள்ளத்தில்
கயம் நுழையாது;
கீழ் வாழும் இல்லத்தில்
மேல் வாழாது!