பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப் பற்றைப் பற்றுக

41



'உயிரானது மாயையையும் விட முடியாமல், இறைவனையும் அடையமுடியாமல் இடையில் துன்புற்று வருந்திக்கொண்டிருக்கிறது! என்பது, அகரத்துள்ளே அடங்கி நிற்கின்ற இவ்வுலக நிகழ்ச்சி!

உலகம் இறைவனை முதலாக உடையது என்று கூறியதிலிருந்தே, உயிரை இரண்டாவதாகவும், மாயையை மூன்றாவதாகவும் உடையது என்பது தானாகவே தோன்றும். இம் மூன்றும் முப்பொருள் உண்மை எனப்படும். இதனை அகரம் தன்னுட் கொண்டு ஒளி வீசுகிறது.

‘அ’ முன்னும் ‘உலகு’ பின்னும் உள்ள இக் குறளை இன்னும் ஒருமுறை படியுங்கள். அதன் புதைபொருள் களனைத்தும் நன்கு விளங்கும்.

        அகர முதல எழுத்து எல்லா (வற்றிற்கும்) ஆதி
        பகவன் முதற்றே உலகு!



9. அப் பற்றைப் பற்றுக!

        பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

இதுவரை இக்குறளுக்குப் பொருள் கூறவந்தவர்கள் அனைவரும், “இவ்வுலகப் பற்றை விடுவதற்கு இறைவனுடைய பற்றைப் பற்றுக” என்றே கூறியிருக்கிறார்கள். இது பொருந்தவில்லை. இவ்வுரை உண்மையாகுமானால், குறள் அடியிற் கண்டவாறு இருப்பதே போதுமானது. அது,

பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு

என்பதே. குறளில் “அப்பற்றைப் பற்றுக” என்று மேலும் இரு பற்றுகள் காணப்படுகின்றன. அவற்றின் பொருள் யாது? என சிந்தனை செய்தாகவேண்டும்:

“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று கூறிவிட்டு, மறுபடியும் அதையே திருப்பி அப் பற்றைப் பற்றுக" என்று