பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

ஆகும் என்பதையும், இக்குறளிலுள்ள “இன்றிக் கெடும்” என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

அழுக்காறு கொண்டவன் கெடும்பொழுது அவனது சுற்றத்தார் நன்னிலையில் இருந்தால், அவனைக் கெட விடாது காப்பாற்றிவிடுவர். ஆகவே, அதற்கும் வழியில்லாமல், அவர்களும் கெட்டுவிடுவர் என்பதே “சுற்றம் கெடும்” என்பதன் பொருள்.

ஒருவன் பிறரிடமிருந்து பெறுவதை நீ தடுத்தால், சுற்றத்தாரிடமிருந்து பெறவேண்டிய இழிநிலை உனக்கே வந்துவிடும் என எச்சரிப்பதாகவும், “சுற்றம் கெடும்” என்பது இக்குறளில் அமைந்திருக்கிறது.

அழுக்காறுகொண்டவனுடைய சுற்றத்தார் கெட்டு விடுவர். அப்பொழுது அவன் தன்னிடமிருப்பதையெல்லாம் அவர்களுக்கு வழங்கி வழங்கி, இறுதியில் அவனும் கெட நேரிட்டுவிடும். என்பதும், “சுற்றம் கெடும்” என்பதன் பொருளாகும்.

ஒருவன் பிறனுக்கு வழங்குவதை நீ தடுத்தால், உன் சுற்றத்தார்க்கு வழங்கவேண்டிய நிலை உனக்கே வந்துவிடும் என்பதையும், “சுற்றம் கெடும்” என்பது சொல்லிக் கொண்டிருக்கிறது.

நீயும் உனது சுற்றத்தினரும் ஒருவருக்கொருவர் வழங்கியோ, வழங்க முடியாமலோ, இருவருமே கெட்டு விடுவீர்கள் என்ற உண்மையும், “சுற்றம் கெடும்” என்பதில் அடங்கியிருக்கிறது.

நீயும் கெட்டு உனது சுற்றமுங் கெட்டுவிடும்; ஆதலின் உனக்கென் றில்லாவிடினும் உனது சுற்றத்தினரைக் காப்பாற்ற என்றாவது நீ பிறரிடம் சென்று


தி.—3