பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இரக்கவேண்டி வரும் என்ற கருத்தும், "சுற்றம் கெடும்" என்பதில் இல்லாமலில்லை.

அழுக்கறுப்பவனும் கெட்டு, அவனது சுற்றத்தாரும் கெட்டு, இரந்து வாழும் இழிநிலைக்கு அவர்களின் கூட்டமே வந்துவிடுமானால், அவர்களால் சமூகத்திற்கு விளையப்போகும் கொடுமைகள் எது எதுவாக விருக்கும் என்பதையும், இக்குறளிலுள்ள "கெடும்" என்ற சொல் நம்மை சிந்திக்கச் செய்கிறது.

ஒருவனுக்குத் தான் கெடுவதைவிட தன் சுற்றத்தார் கெடுவதால் உண்டாகும் துன்பம் அதிகமாகும். ஆகவே அழுக்கறுக்கும் ஒருவன் அப்பெருந் துன்பத்தை அடைய நேரிட்டுவிடும் என்பதையும், "சுற்றம்கெடும்" என்றதால் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார் போலும்.

எப்போதுமே ஏதுமில்லாது தாழ்ந்து வாழ்ந்தவர் படும் துன்பத்தைவிட, உயர்ந்து வாழ்ந்தவர் தாழ்ந்து படுந் துன்பம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை, இக்குறளிலுள்ள (கெடாது) 'சுற்றம் கெடும்' என்ற எச்சரிக்கையால் அறிய வேண்டியிருக்கிறது.

ஒருவன் பிறனுக்கு வழங்குவதைக் காண உன்னால் சிறிதும் பொறுக்கமுடியாமல் போகுமானால், பின்னால் அதனால் விளையும் உன் கேட்டினைக் கண்டும், உனது சுற்றத்தாரின் கேட்டினைக் கண்டும், பொறுக்க முடியாத துன்பங்களையெல்லாம் பொறுக்கவேண்டி வ ரு ம் என்பதே "சுற்றம் கெடும்" என்பதிலுள்ள புதை பொருளாகும்.

கொடுப்பதைத் தடுப்பதால் கொடுப்பவர் உள்ளமும் துன்பப்படும், பெற இருந்தவர் உள்ளமும் துன்பப்படும். ஆகவே, அழுக்கறுக்கும் ஒருவன் அவர்களிருவரின்