பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

8. இன்னா செய்யாமை

மேலறிவுடையார் செய்யாரென்றார்; அதனானே அறிவிலா தார்க்குச் செய்யலாம் போலப்பட்டது நோக்கி உயிருடையார் செய் யார் என்றது. 7

318. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா

பிற்பகற் றானே வரும்.

(இ-ள்) பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின் அச்செய்தல் தானே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல், (எ-று).

இன்னாத செய்ததனால் வருங் குற்றமென்னை யென் றார்க்கு, இது கூறப்பட்டது.

319. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்’

நோயின்மை வேண்டு பவர்.

(இ-ள்) இக் காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் மும் காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டேயுளவாம்; ஆதலால் இக்காலத்துப் பிறர்க்குத் துன்பத்தைச் செய்யார்கள் வருங்காலத்துத் துன்பம் வாராமையை வேண்டுவார், (எ-று)

மேல் இன்னாத செய்தார்க்கு இன்னாத வருமென்றார்; இது வந்த வாறு காட்டிற்று. 9

320. இன்னாசெய் தாரை யொறுத்த லவர் தாண

நன்னயஞ் செய்து விடல்.

(இ-ள்) இன்னாத செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நானும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுதல் (எ-று).

இஃது ஒறுக்கும் நெறி கூறிற்று. 10

1. றாமே” என்பது மணக். பாடம்

2. செய்யசர் ‘ என்பது மணக். பாடம்