பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

8. இன்னா செய்யாமை

314. சிறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

(இ-ள்) மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும்,

பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,

1)) .

இது பழி வாாத செல்வம் பெறினும் தவிர வேண்டுமென்றது; அஃதாவது தீத்தொழிலார் மாட்டுளதாகிய செல்வம் அவரை நலிந்து கொண்டால் உலகத்தார் பழியாராதலான். 4

315. எனைத்தானும் மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு

மாணா செய் யாமை தலை.

(இ-ள்) யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர் மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று. (எ-று)

மேல் வகுத்துக் கூறினார்; இஃது அவ்வாறன்றியாவர் மாட்டுந் தவிர வேண்டும் என்றது. 5

316 அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்1 தன்னோய்போற் போற்றாக்கடை.

(இ- ள்) பிறிதோருயிர்க்கு உறும் நோயைத் தனக்கு உறும் நோய் போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. (எ-று)

இஃது அறிவுடையார் செய்யார் என்றது. 6

317, தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ

i .* - - - HE மன்னுயிர்க் கின்னா செயல்.

(இ-ள்) தன்னுயிர்க்கு உற்ற இன்னாமை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடைத்தலன்றி அறியுமவன்,

பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதனை கருதியோ? (எ-று)

1. பிறிது நோய்’ என்பது மணக். பாடம்.