பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

9. கொல்லாமை

இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. 4

2ே5. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் றலை.

(இ-ள்) மனைவாழ்க்கையில் நிற்றலஞ்சித் துறந்தவர்களெல் லாரினும், கொலை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமை புடையான்; இல்வாழ்க்கையில் நிற்பினும், (எ-று).

இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது. 5

326. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னுரலேசர் தொகுத்தவற்று ளெல்லாந்தலை .

(இ-ள்) பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாது காத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலை யான அறம், (எ-று)

இஃது எல்லாச் சமயத்தார்க்கும் ஒக்க நன்றென்றது. பகுத் துண்டல் கூறிய தென்னை பல்லுயிரோம்புதல் என அமையாதோ? இது கொல்லாமை யாதலால் எனின்? எல்லாச் சமயத்தாருக்கும் ஒக்க நன்றென்றது, இவ்விரண்டறமும் என்றற்காகவும், கொல்லா மையே நன்றென்றார், அதனினும் நன்று அவ்வுயிர்களை யூண் கொடுத்துப் பிறர் நலியாமற் பாது காத்தலென்றற்காகவும் கூறினார் என்று கொள்ளப்படும். Fo

327. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள் மேற்

செல்லா துயிருண்ணுங் கூற்று.

(இ-ள்) கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழுநாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது (எ-று).

பிறவாமை யுண்டாதலால் கூற்றுச்செல்லாது என்றார். இது கொல்லாமையாற் பயன் கூறிற்று. 7

828. உயிருடம்பி னிக்கியா ரென்ப செயிருடம்பிற்

செல்லாத்தி வாழ்க்கை யவர்.