பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

7. பெரியாரைத் துணைக் கோடல்.

பெரியாரைத் துணைக் கோடலாவது தம்மின் முதிர்ந்த அறி அடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற் ற பற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணை யாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.

441. அரியவற்று ளெல்லாமரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

(இ-ள்) செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தல் அரிது தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கூட்டிக்கொள்ளுதல், (எ-று).

பெரியாரென்றது மந்திரி புரோகிதரை, அவரைத் தேடிக் கூட்டுதலரிதென்றது. 1

442 உற்றநோய் நீக்கி புறா.அமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

( இ-ள்) அரசர்க்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்ப முறாமல் முன்பே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக்கொள்க

(எ- று) .

மேல் பெரியாரென்று பொதுப்படக் கூறினார், இது மந்திரி யைக் கூட்டுமாறு கூறிற்று. 2

443. அறனறிந்து முத்தவறிவுடையார் கேண்மை

தி னைறிந்து தேர்ந்து கொளல்.

(இ-ள்) அறத்தின் பாடறிந்து முதிர்ந்த அறிவுடையானது

கேண்மையை அ வ ர வ ர் செய்தியாகிய திறன்களையறிந்து ஆராய்ந்து கொள்க. (வ - ) .

இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. 3

444. சூழ்வார்கண் ணாக வொழுகலசன் மன்னவன்

சூழ்வாரை ச் சூழ்ந்து கொளல்.