பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

15. சுற்றந்தழால்

சுற் றந்த ழாலாவது அரசன் தனது சுற்றத்தினோடு பொருந்தி ஒழுகுதல். ேம ல் அமாத்தியர் மாட்டு அ ர ச ன் ஒழுகுந்திறன் கூறினார். இனிச் சுற்றத்தார் மாட்டு அரசன் ஒழுகுந்திறன் கூறு கினறாராதலின், அதன் பின் இது கூறப்பட்டது.

52 . சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந் தான்

பெற்றத்தாற் பெற்ற பயன்.

(இ-ள்) சுற்றத்தாலே சூழப்பட்டு ஒழுகுவது, செல்வத்தைப் பெற்ற வதனான் உண்டாய பயன், (எ-று) .

இது, சுற்றம் தழுவ ஒழுக வேண்டுமென்றது. 1.

522. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய

சுற்றத்தாற் சுற்றப் படும்.

(இ-ள்) வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வானாயின், தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாலே சூழப்படுவன், (எ-று).

இஃது ஒழுகுந் திறன் கூறிற்று. 2

523. பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்

மருங்குடையார் மாநிலத் தில்.

(இ-ள்) மிகக் கொடுக்க வல்லனாய்ச் சினத்தையும் விரும் பானாயின், அவனின் மிக்க துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை, (எ-று). o

இது, மேற்கூறிய வாறன்றி யில்வாறு செய்யின், துணை யுடையனா மென்றது. இது செய்தலருமையின் வேறு வகுத்துக் கூறினார். 3

524. பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே யுள.

(இ-ள்) பொருளற்ற கண்ணும் பழமையைக் கொண்டாடி விடா தொழுகுதல், சுற்றத்தார் மாட்டே யுளவாம். (எ-று).