பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

19. வெருவந்த செய்யாமை

568. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த

னடுமுரண் டேய்க்கு மரம்.

(இ-ள்) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனதாகிய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரம், (எ-று).

இது, வலியைக் கெடுக்கும் என்றது. 8

569. அருஞ்செவ்வி பின்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேய்கண்ட தன்ன துடைத்து.

(இ-ள்) காண்டற்கரிய காலத்தினையும் கண்டால் இன்னாத முகத்தினையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக் கண்டா

லொக்க அச்சந்தருதலுடைத்து, (எ-று) .

இது, செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது. 3.

570, செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

(இ-ள்) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய் யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிது கெடும். (எ-று .

இது தனக்கு அச்சம் வருவன செய்யலாகா தென்றது. I 0.