பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

3. வினைத்துாய்மை

வினைத்துாய்மையாவது செய்யும் வினை குற்றம் பய வாமற் செய்தல். மேற் சொல்லுங்கால் சொல்வதையும் பிறர் விரும்புமாறு சொல்லல் வேண்டுமென்றார், அது செய்யும் வினையும் அவ்வாறு செய்ய வேண்டுதலின், அதன் பின் கூறப்பட்டது.

651. துணை நல மாக்கந் தருஉம் வினை நலம்

வேண்டிய வெல்லாத் தகும்

(இ-ள்) துணை நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; வினை நலம் அவ்வளவே யன்றி, வினை தன்மை வேண்டியதெல்ல ம் ஒருங்கு கொடுக்கும். (எ-று).

துணை நன்:ை அக்கங் கொடுத்தல் எல்லாாானும் அறியப்

படுதலின் , ஈண்டு வர துவ க வந்தது. இது வினைத்துாய்மை வேண் டும் என்பது உம் அதனால் பயனு:ம் கூறிற்று. I

652. என்று .ெ ருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பவ வினை.

(இ-ள்) எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்; புகழோடு நன்மை பயவாத வினையை, (எ-று).

என்று மென்றது, செயலற்ற காலமுமென்றது. இது முத லாகக் கடிய வேண்டுவன கூறுகின்ற ராகலின் முற்பட அறமும் புக ழும் பயவாத வினையைத் தவிர்க என்றது. 2

6 53. ஒஒதல் வேண்டு மொளிமாழ்.குஞ் செய்வினை

யாஅது மென்னு மவர்.

(இ-ள்) தமக்குப் புகழ் கெடவரும் வினை யைச் செய்தலை ஆக்கங் கருதுவார் தவிர்க, (எ-று).

ஓஒதல் வேண்டும் என்றது ஒளிபுக என்னும் பொருட்கண் ஒவு

தல் வேண்டும் என ஒரு சொல் நீர்மைப்பட வந்தது. இது, முன் புள்ள புகழ் கெட வரும் வினையையும் தவிர்க என்றது. 3