பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

1. பேதைமை

(இ-ள்) முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் மது வுண்டு களித்தாற்போலச் செய்வதறியானாம் பேதையானவன் கையகத்தே ஒரு பொருள் உடையனாகப் பெற்றானாயின் (எ-று).

இது பொருள் பெற்றால் ஒழுகும் திறன் கூறிற்று. 6 837. பொய்படு மொன்றோ புனைபூனுங் கையறியாப்

பேதை வினை மேற் கொளின் .

பயனறியாப் பேதை ஒரு வினையை மேற்கொள்வனாயின், அஃது ஒன்றில் தப்பும்; ஒன்றில் செய்ய வல்லாரைத் தேடும்; அல்லது தான் செய்து முடிக்க மாட்டான். இது பொருள் செய்யும் திறன் கூறிற்று. 7

838. ஏ. திலா ராரத் தமர் பசிப்பர் பேதை

பெருஞ்செல்வ முற்றக் கடை.

(இ-ள்) அயலார் உண்ண, உற்றார் பசித்திருப்பர்; பேதை யான வன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து, (எ-று).

இது, பேதை பொருள்பெற்றால் வழங்குந்திறன் கூறிற்று. 8 839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்

பீழை தருவதொன் றில்.

(இ-ள்) மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது; பிரிந்தவிடத்துவருவதொரு துன்பம் இல்லையாதலான், (எ-று).

இது, (பேதை) காமந்துய்க் குமாறு கூறிற்று. 9

8 30. கழக அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்

குழா அத்துப் பேதை புகல்.

(இ-ள்) கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும்: சான்றோர் அவையின்கண் பேதைபுகுந்து கூடியிருத்தல், (எ-று).

இது, பேதையிருந்த அவை யிகழப்படுமென்றது. 1 ()