பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

11. குது.

செல்வம்-பொன்னும் மனையும் பூமியும் அடியொரு முதலாயின மேல் சூதாடினார் இன்புற்று நிறைவு பெறார் என்றார்; இன்பத் திற்குக் காரணம் ஆகிய இவையைந்தும் அடையார் என்று காரணம் * மிற்று.

934. உருகாய மோவாது கூறிற் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

(இ-ள்) புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறு வனாயின், பொருள் வரவு தன்னை விட்டுப் போய்ப் பிறர் பாற் செல்

டி பி , (எ-று) .

மேற்கூறிய ஐந்தும் அடையாமைக்குக் காரணம் என்னை ன்றார்க்கு , முயற்சியின்மையான் இவற்றை உண்டாக்கற்குக் காரணம் ஆகிய வருவாய் இல்லையாம் என்று அதற்குக் காரணம் ஆகக் கூறப்பட்டது. 4.

935. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்

கழகத்துக் காலை புகின்.

(இ-ஸ்) தோன்றின நாள் தோட்டு வருகின்ற செல்வத்தினை யும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும் சூது கழகத்தின் கண்ணே காலைப் பொழுது புகுவானாயின் (எ-று) .

மேற்கூறிய இன்புறுதல் வாயில ராயினும், தோன்றின நாள் தொட்டு வருகின்ற செல்வம் உடையார்க்கும், பண்புடையார்க்கும் உளதா குமே என்றார்க்கு அவையிரண்டும் போம் என்று கூறப் பட்டது. 5 936. பொருள்கெடுத்துப் பொய் மேற் கொளீஇ யருள் கெடுத்

தல்ல லுழப்பிக்குஞ் சூது. (இ-ள்) சூது, முற்படப்பொருளைக் கெடுத்த, அதன் பின் பொய்மையை மேற்கொள்ளுவிக்கும்; பின் அருளைக் கெடுத்து, அதன்பின் அல்லற் படுத்துவிக்கும், (எ- று).

சூதாடினார் அல்லல் உழப்பர் என்றார்; பொருட்கேடு வருவ தல்லது அருள் கெடுவதுண்டோ என்றார்க்கு, அத்துணை வருமா :) இது என்று கூறப்பட்டது. |