பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367

4. பசப்புறுபருவரல்

1184. உவக்காணெங் காதலர் செல்வா சிவக்காணென்

மேனி பசப்பூர் வது.

( இ-ள்) உங்கேபா ராய் எங்காதலராய்ச் செல்கின்றா ரை இங்கே பாராய் என் மேனி மேலே பசப்புப்பரப்பதனை (எ-று).

இஃது, அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப்பசலை பாவா நின்றது; அவர் வருமளவும் யாங்ஙன மாற்றுதும்’ என்று தலை மகள் கூறியது. 4

1 185. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர் திறமாற்

கள்ளம் பிறவோ பசப்பு.

(இ-ள்) யான் எக்காலமும் நினைப்பேன்; என்றும் சொல்லு வது அவர் திறமே; இத்தன்மையேனாகவும், பசலை (வஞ்சனை யாகப்) பரவா நின்றது; இதற்கு நினைவு யான் அறிகின்றிலேன் (எ-று).

முன்பு களவு காலத்து வேட்கையால் அவரது செயலைக் கூறவும் நினைக்கவும் ஆற்றாமை நீங்கும்; இப்போது அது போலன்றி ஆற்றாமை மிகாநின்றது’ என்று கூறியது. 5

1186. அவர்தந்தா ரென்னுத் தகையா லிவர்தந்தென்

மேனிமே லுரரும் பசப்பு.

(இ-ள்) காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே என்னுடம் பின் மேலே பரந்து பசப்பு ஊரும், (எ-று).

இப்பசலையை நீ க் க வேண்டும்’ என்ற தோழிக்கு என் குறிப்பினான்’ வந்ததல்ல; நீக்கவேண்டுவையாயின் அவர்க்குச் சொல்’ என்று கூறியது. 6

1187. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்

துறந்தா ரவரென்பா ரில்.

(இ-ள்) இவள் பசந்தாளென்று எனக்குக்குற்றம் நாடுமதல் லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை, (எ-று).