பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391

11. நிறையழிதல்

1256. எசற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தசோ

வெற்றென்னை புற்ற துயர்,

(இ-ள்) செறுத்தார் பின்பே யான் சேறலை வேண்டி இத் துயர் உற்றது என்று கொள்ளப்படும் அளித்து. அதற்கு மற்றுப்


பயனென்னை? (எ-று).

இது, ‘தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கை’ யெனக் கூறிய தலைமகளை நோக்கி, நின்போல்வார்க்கு இது

தகாது என்ற தோழிக்கு அவள் கூறியது 6.

1257. பன்மயக் கன்வன் பணிமொழி யன்றோ நம்

பெண்மை யுடைக்கும் படை.

( இ-ள்) பலபொய்களையும் வல்ல கள்வனது த ன ழ் ந் த மொழியல்லவோ, நமது பெண்மையை அழிக்குங் கருவி, (எ-று).

இஃது, ‘அன்பில்லாதானை நினைத்து யான் சொன்ன மாற்றத் திற்கு மாறுபடக் கூறுதல் பெண்மையல்ல’ என்ற தோழிக்கு, ‘அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண் மையைக் கெடுக்கின்றது; அல்லது கெடாது’ என்று (தலைமகள்) கூறியது, 7

1258. தினத் தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ

புணர்ந்துர டி நிற்போ மெனல்.

(இ-ள்) தீயின்கண்ணே நினத்தையிட்டால் ஒக்க உருகும் நெஞ்சினை யுடையார்க்கு உளதாகுமோ, காதலரை யெதிர்ப்பட்டு வைத்து ஊடி நிற்பே மென்று நினைத்தல், (எ-று).

இது நிறையழிந்து கூறிய தலைமகள் ஆற்றுதற்பொருட்டு, “நம் காதலர் வந்தால் ஊடுவையோ? என்று நகைக்குறிப்பினால் கூறிய தோழிக்கு விடுதலரிது’ என்று தலைமகள் கூறியது. 8

1239. புலப்ப லெனச் சென்றேன் புல்லினே னெஞ்சங்

கலத்த லுறுவது கண்டு.