பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393

12. அவர் வயின் விதும் பல்

(இ-ள்) கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும் விக தானாகில், என்பசலைநோயெல்லாங் கெடப் பருகுவன் (எ-து).

இது, வரவு வேட்கையாற் கூறியது - I

1282. வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து

மாலை யயர்கம் விருந்து.

(இ-ள்) நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வா ணாக, யாம் மனையிலே பொருந்தி இம்மாலைப் பொழுதிலே நம் காதலர்க்கு விருந்து செய்வோமாக, (எ-று).

வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை-அட்டில் வந்தால் விருந்திடுமாறு நினைந்து கூறியது. E.

1263. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி

iைங்குமென் மென்றோட் பசப்பு.

(இ, ள்) என்கண்கள் கொண்கனைக் காண்பனவாக; அவை நிறையக் கண்டபின்பு எனது (மெல்லிய) தோளினுண்டாகிய பசலை நீங்கும். (எ-று).

- இது காண்டல் வேட்கையால் கூறியது. 3.

1284 புலப்பேன் கொல் புல்லவேன் கொல்லோ கலப்பேன்

கண்ணன்ன கேளிர் வரின். (கொல்

(இ-ஸ்) என் கண்போன்ற காதலர் வருவர் ஆயின் நம்மை நினையாமையை நினைத்துப் புலந்து நிற்பேனோ? நெட்டாறு நீந்தி வருகின்றார் ஆதலின் எதிா சென்று புல்லிக்கொள்வேனோ? இவை இரண்டும் செய்யாதே வேட்கை தீரக்கலப்பேனோ? இவை மூன்றி னும் யாது செய்வேன், (எ-று).

இது, கண்டாற் செய்வன இவை ஆதலின் இவை மூன்றும் செய்ய வேன்டா நின்றது என்று ஆராமை கூறுயது. 4.