பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

இது. மாற்றுதவிக்கு அளவில்லை என்றது. 8

109. கொன்றன்ன வின்னு செயினு மவர்செய்த

வொன்று நன் றுள்ளக் கெடும்.

(இ-ள்) தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன் ஹாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும், அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அத் தீமை யெல்லாங் கெடும், (எ-று).

ஒருகால் நன்மை செய்தார் பல கால் தீமை செய்யின் அதற்குச் செய்யுமா றென்னை என்றார்க்கு இது கூறப்பட்டது. 9

10. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

(இ-ள் எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின் பொரு காலத்தே யாயினும் உய்தலுண்டாம்; ஒரு காலமும் உய்த வில்லை ஒருவன் ெச ய் த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு.

பெண்டிர்க்கும் வேண்டுமாயினும் தலைமைபற்றி மகனென்றார், இது செய்நன்றியறியாதார்க்குளதாம் குற்றம் கூறிற்று. 10

8. நடுவுநிலைமை

நடுவுநிலைமைய வது நட்டார்மாட்டும் பகைவர்மாட்டும் ஒக்க நிற்குப நிலைமை.

மேற்றமக்கு நன்மைசெய்தார்க்குத் தாமும் நன்மை (செய்ய வேண்டுமென்றார்: அவர்க்கு நன்மை பயக்குமாயினும்) நடுவல்ல செய்யலாகாதென்பதனானும், இது மனத்தினானும் மொழியி னானும் செய்தலே யன்றி மெய்யொடுங்கூடச் செய்யப் படுதலானும் பிற் கூறப்பட்டது.

111. சமன்செய்து சீர்தரக்குங் கோல்போ லமைந்தொருபாற்

கோடாமை சான்றாேர்க் கணி.