பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

10. ஒழுக்கமுடமை

இஃது ஒழுக்கமாவது உயர்ந்தோ ரொழுகு நெறி ஒழுகுத லென்பது உம் அவ்வொழுக்கம கல்வியினும் வலியுடைத்தென்

பது ம் கூறிற்று.

133. மறப்பினு மேரத்துக் கொள லாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

(இள்) பார்ப்பான் வேதத்தினை ஒதி மறந்தானாயினும் பின்பும் ஒதிக்கொளலாகும். , ஒழுக்கங் குறையுமாயின் குலம் கெடும் (எ- று)

இது ஒழுக்கம் கல்வியினும் வலிதாயினவாறு கூறிற்று 3

134. ஒழுக்கத்தி னொல்கா ருரவோ விழுக்கத்தி

னே தம் படு பாக் கறிந்து

(இ-ள்) ஒழுகத்தினை நீங்கார் அறிவுடையார்; அதனைத் தப்பினாற் குற்றம் வருமாறறிந்து, (எ-று)

இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருமாறு பின்பே காணப்படும்.

135. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

மிழிந்த பிறப்பாய் விடும். (இ-ள்) ஒருவன் இழி குலத்தானாயினும் ஒழுக்க முடை யவனாக உயர்குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவனாயின்’ உயர் குலத்தனாயினும் இழிகுலத்தனாயே விடும். (எ-று) .

இது குலங்கெடுமென்றது. --- 5 136. அழுக்கா றுடையான்க ணுக்கம்போன் றில்லை

யொழுக்க மிலான் க ஜயர்வு (இ-ள்) மனக்கோட்ட முடையான்மாட்டு ஆக்கம் இல்லை யானாற்போல ஒமுக்கமில்லாதான்மாட்டு மிகுதியில்லையாம் (எ-று) இது உயர்ச்சியில்லையா மென்றது. 6 137. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி

னெய்துவ ரெய்தாப் பழி.