பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

20. புகழ்

235. நிலவரை நீள் புக ழாற்றிற் புலவரை ப்

போற்றாது புத்தே ளுலகு. (இ-ள்) ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழினைச் செய்வனாயின், தேவருலகம் புலவரைப் போற்றாது. இவனைப் போற்றும், (எ-று).

புலவரென்றார் தேவரை, புலவர் புலனுடைய ராதலால் புகழ் என்றது புகழ்பட வாழ்த லென்று ஒரு தொழிலாயின வாறு கண்டுகொள்க. இது, புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்று - மென்றது. 5

236. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

யிகழ்வாரை தோவ தெவன்.

(இ-ள்) புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை பிகழ்வாரை நோகின்றது யாதனுக்கு (எ-று)

இது, புகழ் பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது .ே

237 வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசை யென்னு

மெச்சம் பெறாஅ விடின்.

(இ-ள்) உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின் அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லு வர் (எ-று).

மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார், அவர் குற்றமில்

லாராயின் இகழப்படுவரோவென்றார்க்கு, வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றது. 7

238. வசையொழிய வாழ்வாரே வாழ்வன ரிசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

(இ-ள்) வசை யொழிய வாழுமவர்களே உயிர் வாழ்ந்தாராவர்; புகழொழிய வாழுமவர்களே உயிர் வாழாதார், (எ-று).

இது, புகழில் லார் பிணத்தோ டொப்ப ரென்றது. 8

239 விசையிலா ாைண்ா:ங்குன்று மிசையிலா

யாக்கை 1ெ1:றுத்த நிலம்