பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

யடிகள் இரவில் தம்மூர்க்கு வீட்டினுள்ளே புகாமல் புறங் கடையிற் படுத்துறங்கினர். மனைவியார் அவரை எழுப்பி, 'வீட்டினுள்ளே வந்து சிவ வழிபாடு செய்து பள்ளிகொள்ள லாம் என அழைத்தார். அது கேட்ட நமிநந்தியடிகள், 'இன்றைய தினம் திருவாரூர்ப் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்துச் சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சா தி யா ரு ம் கலந்திருந்ததால் தி ட் டு ண் டா பி. ற் று. நீராடியே வீட்டிற்குள் வருதல் வேண்டும். குளித்தற்குத் தண்ணிர் கொண்டுவா’ என்று கூற, அவரும் உள்ளே விரைந்து சென்ருர். இதற் கிடையில் நமிநந்தியடிகளுக்குச் சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கப் பெருமான் அடிகள் கனவில் தோன்றி, ‘அன்பனே, திருவாரூர்ப் பிறந்தார். எல்லாரும் தம் சிவகணங்களே. அதை நீ கா ண் பாய்’ என்று சொல்லி மறைந்தருளினர். விழித்தெழுந்த நமிநந்தியடிகள் அடி யார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென் றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று: சிவபூசையை முடித்து விடிந்தபின் திருவாரூர்க்குச் சென்ருர், திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லா ரும் சிவசா ரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். அடியார் களிடையே சாதிவேறுபாடிருப்பதாக எண்ணிய தமது பிழையைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டினர். திருவாரூரையே தங்குமிடமாகக் கொண்டு திருத் தொண்டுகளைச் செய்து திருநாவுக்கரசரால் 'தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பெறும் பேறு பெற்று இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

(29) திருஞானசம்பந்தமூர்த்தி காயனர்

சோழ நாட்டிலே பிரமபுரம் முதலிய பன்னிரண்டு

திருப்பெயர்களையுடைய சீகாழிப்பதியிலே நான்மறை

புணர்ந்த அந்தணர் குலத்திலே கெளனிய கோத்