பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金2

ஆயார் பின்தொடரத் தோணிபுரத்திறைவரைப் பாடிப்பரவிய திருஞானசம்பந்தர் அருகேயுள்ள திருக்கோ லக்காத் திருக் கோயிலையடைந்து தம் மெல்லிய கைகளால் தாளி மிட்டுப் பாடினர். கோலக்கா விறைவர் அவருக் குப் பொற்ருளம் கொடுத்தருளினர். தம் தாயார் பிறந்த திருநனிபள்ளிக்குத் த ந் தை யார் தோளில் அமர்ந்த சென்ற பிள்ளையார் பாலை நிலம் நெய்தல் நிலமாகும்படி “காரைகள் கூகைமுல்லை’ என்ற பதிகம் பாடினர். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் திருஞானசம்பந்தரை வணங்கி அவர் அருளிய திருப்பதிகங்களை யாழில் வாசிக்கவும் மிடற்றிற் பாடவும் பேறு பெற்றனர்.

ஆளுடைய பிள்ளையார் தில்லைப்புெ ரு மாளே வணங்கித் திருநெல்வாயில் அரத்துறை யடைந்தபொழுது அரத்துறையீசர் அருளால் முத்துச்சிவிகை குடை சின்னம் பெற்ருர் . சீகாழியில் தமக்கு உபநயனச் சடங்கு நிகழ்ந்தபோது 'அந்தியுள் மந்திரம் அஞ்செழுத் துமே” எனப் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடியருளினர். சீகாழிப்பதியில் தம்மைக் காண வந்த திருநாவுக்கரசரை, "அப்பரே என அன்புடன் அழைத்து நண்பில்ை உப சரித்தார். திருப்பாச்சிலாச்சிராமம் என்ற த லத் தை வணங்கச் சென்றபோது மழநாட்டரசன் கொல்லி மழவன் பெற்ற பெண்ணின் முயலக நோயைத் தீர்த் தருளினர். பனிப்பருவத்தில் கொங்கு நாட்டில் திருக் கொடிமாடச் செங்குன்றுாரில் தங்கியிருந்தபோது தம் முடன் வந்த திருக்கூட்டத்தாரைப் பனியென்னும் சுரநோய் பற்ருதபடி அவ்வினைக் கிவ்வினை என்னும் திருநீலகண்டத் திருப்பதிகத் தை ப் பாடியருளினர். வேனிற்பருவத்தில் நண்பகலில் பட்டீச்சுரத்தையடைந்த பொழுது சிவபெருமான் திருஞானசம்பந்தர்க்கு முத்துப் பந்தர் கொடுத்தருளினர். தந்தையார் வேள்வி செய் தற்கெனப் பொன்வேண்டிப் பாடியபோது திருவாவடு