பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

துறையிறைவர் ஆயிரம் பொன்களைக் கொண்ட உலவாக் கிழியினைக் கொடுத்தருளினர். திருநீலகண்டப்பாணர் தாயார் பிறந்த தருமபுரத்தில் அவர் வேண்டியவண்ணம் யாழ்முரிப் பண் பாடியருளினர். திருச்சாத்தமங்கை, திருச் செங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய தலங்களே வணங்கியபோது திருநீலநக்கர் , சிறுத்தொண்டர், முரு கனர் முதலிய அடியார்களுக்கு நண்பராய் அவர் களைத் திருப்பதிகத்திற் பாராட்டினர். திருமருகலில் விடந்திண்டியிறந்த வணிகனப் பதிகம் பாடி எழுப்பி அவனுடன் வந்த பெண்ணே அவனுக்குத் திருமணஞ்செய்து வைத்தருளினர். திருநாவுக்கரசருடன் திருவிழிமிழலையில் தங்கியிருந்தபோது திருவிழிமிழலைப்பெருமான் பஞ்ச காலத்தில் நாள்தோறும் இருவர்க்கும் படிக்காசு அருள உடன்வந்த அடியார்களுக்கு அமுது செய்வித்தருளினர். திருமறைக்காட்டில் "சதுரம் மறைதான் துதி செய்து வண்ங்கும் என்ற திருப்பதிகத்தினைப் பாடி மறைக்கத்வினை மூடச்செய்தார்.

பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்

சர் குலச்சிறையாரும் வேண்டிக்கொண்டதற்கிசைந்து பாண்டிநாடு சென்று திருவாலவாய்பெருமானைப்

பாடிப் பரவிஞர். பாண்டியனது சார்பு பெற்ற சமணர் கள் சம்பந்தர் தங்கிய திருமடத்தில் நள்ளிரவில் தீ யிட்டனர். அதனேயுணர்ந்த சம்பந்தர் அத் தீடையவே சென்று பாண்டியற் காகவே' எனப் பாடினமையால் பாண்டியனுக்கு வெப்பு நோய் உண்டாயிற்று. சமணர் கள் மத்திரித்தும் பயனில்லை. மந்திரியார் கு ல ச் சி ைற யாரும் மங்கையர்க்கரசியாரும் திருஞானசம்பந்தரைப் பணிந்து வேண்ட அவர் மந்திரமாவது நீறு" என்னும் திருநீற்றுப்பதிகத்தைப் பாடி நீறுகொண்டு பாண்டியன் மேனியில் தடவியருளப் பாண்டியன் சுரநோய் நீங்கி உய்ந்தான். தோல்வியுற்ற சமணர்கள் நெருப்பிலும் நீரிலும் தத்தம் சமயவேடுகளை இட்டு வாது செய்