பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

委9

இவன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் தீராது’ என எண்ணிய சிவயோ கியார் , தம்முடைய உடம் பினேப் பாதுகாவலான இடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தித்திறத்தால் தமது உயிரை ஆயனுடம்பிற்பகு மாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். பசுக்கள் மகிழ்ந்தன. மாலைப்பொழுது வந்ததும் தத்தம் உறை புளுக்குத் திரும்பிச் சென்றன. திருமூலர் அவற்றின் பின்னே சென்ருர். மறுநாள் தமது பழையவுடம் பினைப் பாதுகாத்துவைத்திருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். இறைவனருளால் அவ்வுடம்பு மறைக்கப் பட்டது. அதனல் மூலன் உடம்பிலேயேயிருந்து திருமூல ராகித் திருவாவடுதுறையிலுள்ள திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்து அமர்ந்திருந்தார். என்னைத் திருமூலனுடம்பிற் புகுத்திய இறைவனது அருள் நோக்கம் தமிழாகத்தால் தன்னியல்பினே நன்ருக உணர்த்துதற் பொருட்டே எனத் தெளிந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடலாகத் தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர மாலையை அருளிச்செய்து திருக்கயிலையை அடைந்தார்.

{32) தண்டியடிகள் நாயஞர்

திருவாரூரிற் பிறந்த தவச்செல்வராகிய இவர் : திருவாரூர்த் திருக்குளத்தினைச் சமணர்கள் வரவரத் துரர்த்துக்கொண்டு வருதலைத் தடைசெய்ய எண்ணினர். பிறவிக்குருடராகிய இவர் அக்குளத்தை ஆழப்படுத்தக் கருதித் திருக்குளத்தில் ஒரு தறியும் குளக்கரையில் ஒரு தறியும் நட்டு, அவற்றிடையே கயிறு கட்டி அக்கயிற்றைத் தடவிக்கொண்டே குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டிக் கரையிற் கொண்டுவந்து கொட்டிஞர். இவர் செயலே வெறுத்த சமணர்கள் மண்ணைத் தோண்டினல் சிற்றுயிர்கள் இறந்துபடும் என்று கூறித் தடுத்தனர். தண்டி யடிகள் அவர்கள் பேச்சைக் கேளாது தமது பணியினைத் செய்ய முற்பட்டார். அந்நிலையில் சமணர்கள் தண்டிகளே.

4 ساله8B