பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நின்றசீர் நெடுமாறர் வடபுலவேந்தரை நெல்வேலிப் போரில் வென்று வாகைமாலை புனைந்தார். சிவபெரு மானுக்குரிய திருத்தொண்டுகள் புரிந்து அருள்நெறி வளம் பெற நெடுங்காலம் அரசளித்த நின்றசீர் நெடுமாற நாயனர் இறைவர் அருளால் சிவலோகத்தினை எய்தி இன்புற்ருர்,

(52) வாயிலார் காயகுள்

தொண்டை நாட்டில் மயிலாப்பூரில் வேளாண் மரபில் வாயிலார் குடியில் தோன்றியவர் வாயிலார் நாயனர். சிவனடித்தொண்டில் ஆர்வமுடைய இப்பெருந் தகையார் , மறவாமையால் அமைத்த மனக்கோயிலி னுள்ளே இறைவனே எழுந்தருளச்செய்து ஆண்டான் அடிமை உறவினை யுணரவல்ல ஞானமாகிய திருவிளக் கினை ஏற்றி, அழியாத ஆனந்தமாகிய திருமஞ்சனம் ஆட்டி, அன்பாகிய திருவமுதினைப் படைத்து வழி படுதலாகிய அகப்பூசையினை நெடுநாள்கள் வழுவாது செய்திருந்தார். பின்னர்ச் சிவபெருமான் திருவடி நீழற் கீழ்ச் சென்றடைந்தார்.

(58) மூணயிடுவார் காயனுள்

இவர் சோழநாட்டில் திருநீடூரில் வேளாண் குலத்தில் தோன்றியவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார் திறத்தும் நிறைந்த பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வங்களைச் சிவனடி யார்க்கு வரையாது அளிக்கும் வண்மையுடையவர். போரிற் பகைவர்க்குத் தோற்றவ்ர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினல் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையிற் கூலி பேசிக்கொண்டு அவர்கட்காகப் போர் முனையிற் சென்று போர் செய்து பொருள் சேர்த்துச் சிவனடியார்களுக்கு நிறையக் கொடுத்து அறுசுவைக் கறி களுடன் திருவமுது செய்வித்தலைத் தமது பணியாகக் கொண்டிருந்தார். அதனல் இவருக்கு முனையடுவார் என் னுந் திருப்பெயர் வழங்குவதாயிற்று. முனையடுவார்